Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

நமதூர் பள்ளி வாசல் பராமரிப்பு பணி....



நமதூரில் உள்ள கிழக்கு பழைய பள்ளிவாசல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. பள்ளிவாசல் முன்உள்ள கூறையை பிறிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளர்

அரசாங்க தகவல்கள் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி தெரிந்து கொள்வோம்..


Employment – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது

அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.
 
ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
 

நல்லதொருகுடும்பம் - - - - கணவன் – மனைவி!

குறிப்பு:- இந்த ஆக்கம் யாரையும் குறிப்பிட்டோ, அல்லது குத்திக் காட்டியோ எழுதப்பட்டது அல்ல, பொதுவாக மானிடர் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்களை பல நாட்களுக்கு மத்தியில் பல கோணங்களில் சிந்தித்து மற்றும் பெரும்பான்மையான குடும்பங்களை சந்தித்து தொகுக்கப்பட்ட ஒரு ஆக்கமாகும்.

மானிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா-உம்மம்மா, வாப்பா-உம்மா, காக்கா-தம்பி, ராத்தா-தங்கச்சி, மாமா-மாமி, மச்சான்-மச்சி, பெரியப்பா-சின்னவாப்பா, பெரியம்மா-சின்னம்மா, இன்னும் அநேக உறவு

சனி, 28 செப்டம்பர், 2013

இன்று நமதூரில் நடமாடும் இஸலாமிய புத்தகங்கள்....

இன்று ( 28.09.2013 )நமதூரில் இஸ்லாமிய நடமாடும் புத்தக கண்காட்சி IFT பதிப்பகத்தால் நடைபெற்றது. இதில் இஸ்லாம் சம்மந்தமான நூல்கள் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்மந்தமான சந்தேகத்திற்கான நூல்களும் இடம் பெற்று இருந்தது.

தவறான காட்சிகளை பார்க்கும் பழக்கமா

தவறான காட்சிகளை பார்க்கும் பழக்கமா ? இதை கொஞ்சம் பாருங்கள் இனி அந்த தவரை செய்ய மட்டிர்ஹல்....

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மோடி படத்தை செருப்பால் அடித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இளந்தாமரை மாநாட்டிற்கு வந்த மோடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ.யினர் மோடி படத்தை செருப் பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதன், 25 செப்டம்பர், 2013

காவி பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை!

மோடியின் தமிழக வருகையும் முஸ்லிம் அமைப்புகளின் நிலையும் !



நரேந்திர மோடியின் தமிழக வருகையை ஒட்டி தமிழகமே மோடியை வரவேற்கத் தயாராகி விழாகோலம் பூண்டு காத்திருப்பது போல் சங்பரிவாரக் கும்பல்களின் சதிக்கும், சல்லிக்கும் பலியான ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இல்லை இது இது பெரியாரும் அண்ணாவும் பயிற்றுவித்த மண் இங்கு மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை எடுத்து சொல்ல மகஇக, மே 17 இயக்கம் போன்ற பல்வேறு முஸ்லிமல்லாத அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம் அமைப்புகளில் பெருமபாலனவை மவுனம் காப்பது ஏன் என்று விளங்கவில்லை! 

துபாய்க்கு அதிகமான ஆட்கள் தேவை

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆதார்: உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கிடைத்த அடி!

தலையங்கம்
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான கே.எஸ். புட்டாசாமி உச்சநீதிமன்றத்தில் “மத்திய அரசின் ஆதார் அட்டை திட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்” என்று பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார்.
மேலும் பல்வேறு மாநில அரசுகள் சம்பளம் பெறுவதற்கும், ஓய்வூதியம் பெறுவதற்கும், திருமணம் பதிவு செய்யவும், நிலம் பதிவு செய்யவும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன.

நோய் தொற்றுகளை தடுக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Vitamin A திரவ மருந்து வினியோகம்

அங்கன்வாடி மையங்களில் கண்களை பாதுகாக்க, நோய் தொற்றுகளை தடுக்க இன்று முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்து வழங்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் 27ம் தேதி வரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது

திங்கள், 23 செப்டம்பர், 2013

மோடியின் இரு முகங்கள்!

ஒரு சின்ன சம்பவம் கலவரமாக உருமாறும்போது என்னவாகும்?
மக்களாகிய நாம் உடைமைகளை இழப்போம்; உறவுகளை இழப்போம்; உயிரை இழப்போம்... அரசியல்வாதிகளுக்கோ லாபம், லாபம், லாபம்.
உத்தரப் பிரதேசத்தின், முஸாஃபர் நகரிலும் நடந்தது இதுதான். ஆகஸ்ட் 27 அன்று கவால் கிராமத்தைச் சேர்ந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேலிசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மூன்று கொலைகள் நடந்தன. முதல் கொலை... அந்த முஸ்லிம் இளைஞர். அடுத்த இரு கொலைகள்... அவரைக் கொன்ற இரு இளைஞர்கள் - பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்கள்.
அதிகபட்சம் இரு குடும்பங்களுக்கான அல்லது இரு ஊர்களுக்கான சண்டையாக மட்டும் மாறியிருக்கக் கூடிய ஒரு சம்பவம். உத்தரப் பிரதேசம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது; 48 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 1,000 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்; 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்... அரசியல்!

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை பெறலாம்.

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன்

பெயர் சேர்க்க, திருத்த தேர்தல் கமிஷன் புதிய வசதி


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில்

வியாழன், 19 செப்டம்பர், 2013

நமதூர் வங்கியில் பெண்ணிடம் பணம் பறிப்பு...

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு  வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங் கூரை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(32). இவர் கடந்த ஒரு வருடத் துக்கு முன், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடி காட்டில் உள்ள ஒரு வங்கி யில் நகைகளை அடகு வைத்திருந்தார். அந்த நகை களை மீட்பதற்காக இந்திரா ரூ.1 லட்சம் பணத்�துடன் நேற்றுமுன்தினம் மதியம் அந்த வங்கிக்கு வந்தார்.

பேருந்து பயணிகளின் நேரத்தைப் போற்றும் துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகரான துபாய், பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உலகிலேயே மிக நீளமான ஆளில்லா / தானியங்கி ரயில் சேவையை திறம்பட செய்து கட்டுக் கடங்காமல் இருந்த சாலைப் போக்குவரத்து பிரச்சினையை வெகுவாகக் குறைத்தது. இதனால் அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இது மட்டுமின்றி, நகரெங்கும் இருந்த பேருந்து நிறுத்தங்களை குளிர்சாதன வசதி கொண்ட வகையில் மாற்றியமைத்ததோடு அட்டவனையில் குறிப்பிட்டபடி பேருந்துகள் துல்லியமாக வந்து செல்லும்படி வசதியும் ஏற்படுத்தியது.

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்குரிய சகோதர்களே இந்த நல்ல வாய்பினை பயன் படுத்துங்கள். நம் சமுதாயம் இது போன்ற வேலையில் அமருவது என்பது நம் நாட்டில் நடக்காது ஒன்றாகவே இருந்து வருகிறது. தகுதியுடையவர்கள் அனைவர்களும் விண்ணப்பிக்கவும் . இதை வாசித்த அனைவர்களும் தங்களின் நன்பர்களுக்கும் தெரிவித்து நம் சமுதாயம் இது போன்ற வேலைகளில் அமர உதவுங்கள்
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதன், 18 செப்டம்பர், 2013

சந்தோசமான விசயம் ! ஆனால் வருத்தம் அளிக்கிறது !!!

தீன் இயக்கத்திற்கு பிறந்த 107 குழந்தைகள்

அல்ஹம்துலில்லாஹ்.. உங்களுடைய இந்த பணி இந்த அளவிற்கு வெற்றி அடைந்ததற்கு உங்களை வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் நோக்கம் நல்லவையாக இருந்தாலும் நம்பகதன்மை கோள்விற்குறியாகவே உள்ளது. ஆம் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்திதான் அது பாடம் படிக்க மறந்த தீன் இயக்க நிர்வாகிகள் (http://labbaikudikadunews.blogspot.ae/2013/09/blog-post_11.html) அதில் மக்கள் ஏற்படுத்திய சந்தேகத்திற்கு நீங்கள் (தீன் இயக்கம்) இது வரைக்கும் இப்பவும் வாய் மூடிதான் உள்ளீர்கள் அப்போதும் அதாவது ஜமாத் கேட்கும் போதும் வாய்மூடிதான் இருந்தீர்கள். ஒரு பெய்யை பல தடவை

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

லீக் வளர்ச்சிப்பாதையா? வீழ்ச்சிப்பாதையா?

லீக் வளர்ச்சிப்பாதையா? வீழ்ச்சிப்பாதையா?


அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நமதூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு MGM மகாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இஸ்லாமிய திருமண சட்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்….
இந்த கூட்டம் மழையின் காரணமாக உள் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. இதில் அக்கட்சி MP உட்பட அனைத்து பொதுமக்களும் திரலாக கலந்துக் கொண்டனர். கடந்த காலங்களில் லீக் செயல்பட்ட முறைகளையும் நடப்பு

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை!

செப்டம்பர்  14 உலக முதலுதவி தினம்!
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.
இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.
ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே “முதலுதவி” எனப்படும்.

சனி, 14 செப்டம்பர், 2013

கடந்த வாரம் நமதூரில் பள்ளி பேரூந்து விபத்தால் பரபரப்பு...

கடந்த வாரம் நமதூரில் பள்ளி பேரூந்து விபத்தால் பரபரப்பு...




கடந்த வாரம் பள்ளி பேரூந்து ஒன்று பேருந்து நிலையத்தில் உள்ள  ஒரு மின் கம்பத்தில் மேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் பேரூந்தில் குழந்தைகள்

புதன், 11 செப்டம்பர், 2013

பாடம் படிக்க மறந்த (மறுத்த) தீன் இயக்க நிர்வாகிகள் ?

பாடம் படிக்க மறந்த (மறுத்த) தீன் இயக்க நிர்வாகிகள் ?
ஒன்பது குழுக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தார். நல்ல அறிவும், திறமையும் உள்ளவர்கள். ஆனால் உண்மை விசுவாசிகள் இல்லை. அவர்கள் நேருக்கு நேர் சிந்திப்பவர்கள் அல்லர். குறுக்கு புத்தி கொண்டவர்கள். சதித்திட்டம் தீட்டுபவர்கள். ஸமூத் கூட்டத்தாரை அவர்கள்தான் வழிநடத்திச் சென்றார்கள்.

ஸமூத் கூட்டத்தார் உடல் திடகாத்திரம் உடையவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுந்த பொருள் வளமும், உடல் பலமும் கொடுத்திருந்தான். பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளுக்கும், கனி தரும் தோட்டங்களுக்கும் சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்தனர்.

மலைகளைக் குடைந்து அதியற்புதமான, அழகான வீடுகளை உருவாக்கி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்க்கையில் என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையத்தனையும் அவர்களுக்குக் கிடைத்தன.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இறப்பு செய்தியை எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிக்க வேண்டும்


இறப்பு செய்தியை எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிக்க வேண்டும் 

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி என்றாலே... சுமார் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள் வாழும் ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வூரில் ஏதேனும் ஒரு விஷயம் பொதுமக்களிடம் உடனடியாக சென்றடைய வேண்டுமென்றால், இங்குள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் தகவல் அறிவிப்பார்கள். உதாரணமாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது, ரேஷன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது, குழந்தை காணவில்லை, இறப்பு செய்தி... இப்படி அறிவிக்கப்படுகின்ற பல செய்திகள் அடுத்த நிமிடமே ஊரில் உள்ள அனைவருக்கும் சென்றடைந்து விடுவதில் மகிழ்ச்சிதான்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

பயான் கலாச்சாரத்திற்கு துணைபோகும் தாருஸ்ஸலாம் தவ்ஹித் பள்ளிவாசல்

பயான் கலாச்சாரத்திற்கு துணைபோகும் தாருஸ்ஸலாம் தவ்ஹித் பள்ளிவாசல்
கடந்த சில காலங்களாகவே நமது தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் மஹரிப் தொழுகைக்கு பிறகு பின் சுன்னத் தொழுவதை காட்டிலும் முதலாவது கடமையாக பயான் செய்த பின் சுன்னத் தொழுகை தொழுது கொள்ளுமாறு மக்களை மறைமுகமாக நிர்பந்தம் செய்து வருகிறார் பள்ளி இமாம் அவர்கள்.

இது நாள் வரை  பர்ளு தொழுத பிறகு பின் சுன்னத் தொழுவது வழக்கமாக

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நமதூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆர்க்கெச்ட்டா ...


இன்று நமதூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆர்க்கெச்ட்டா நடைபெற்றது. 

நமதூரில் காணப்பெற்ற சுவரரெட்டிகள்....



ஜமாலியா நகர் வாட்டர் டேங் புதிய பொழிவுடன்....

நமதூரில் உள்ள ஜமாலியா நகர் வாட்டர் டேங் புதிய பொழிவுடன் காட்சி தருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த வாட்டர் டேங் பற்றி முகநூலில்

வியாழன், 5 செப்டம்பர், 2013

மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு!

இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி. எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது.
இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நமதூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....



கடந்த சில நாட்களாகவே இரவில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) காரணமாக நமதூர் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வரத்து காணப்பெற்றது. இதன் காரனமாக நமதூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு அத்தா நமது நிருபர் இடம் சொன்ன

திருச்சி தவ்ஃபீக் சுல்தானா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் துணை மருத்துவக் கல்லூரி மாணவி வன்புணர்ந்துத் தாக்கப்பட்டது;
மும்பையில் ஊடகக் கலைஞர் கூட்டாக வன்புணரப்பட்டது ஆகிய செய்திகளின் வரிசையிலமைந்த கொடூரமான செய்தியாக திருச்சியில் பள்ளி மாணவி தவ்ஃபீக் சுல்தானா கொடூரமாக வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் ஒன்று.
வட இந்தியாவில் நிகழ்ந்த; நிகழ்கிற துர்ச்சம்பவங்களுக்குக் கிடைக்கிற ஊடக முக்கியத்துவமும், நாடு தழுவிய விழிப்புணர்வும் தென்னிந்தியச் செய்திகளுக்குக் கிடைப்பதில்லை என்பதற்குச் சான்றாகவும் இச்செய்தி விளங்குகிறது.  இந்நிலையில் மாணவி தவ்ஃபீக் சுல்தானா வன்புணர்ந்து