Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 22 அக்டோபர், 2013

தொடரும் பயணங்கள் - பாகம் 2

உயிர்
உயிரும் உடலும்

இந்த மய்யத் என்ற பெயரை நாம் பெறக்காரணம் நாம் நமது உடலில் உள்ள ரூஹை (உயிரை) இழக்கிறோம். நம் உடம்பில் இருந்து ரூஹை நம்மைவிட்டு பிரியும் போது முடம், குருடு, செவிடு, ஊமை என்ற அனைத்து முடியாமையையும் உள்ளடக்கிய அர்த்தத்தை கொண்ட மிக மிக பலஹீனமான நிலையைக் கொண்ட மய்யத் என்ற பெயரை பெறுகிறோம்.


இப்படி இவ்வளவு காலமாக நமது கண்களுக்கு ஒளியையும் காதுகளுக்கு கேள்வித்திறனையும், வாய்க்கு பேசும் ஆற்றலையும் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்க முடியாத அளவு அழகாக சரியாக சிறப்பாக இயங்க வைத்துக் கொண்டிருந்த இந்த ரூஹ் (உயிர்) என்றால் என்ன? இதன் தாத்பரியம் என்ன? இது உடலில் எங்கே இருக்கிறது? இதுபற்றி எதுவுமே நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட மிகப்பெரிய சக்தியைப்பற்றி அழகாக தமது திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.

(நபியே!) உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். ரூஹ் (உயிர்) என்றால் என் இறைவனின் கட்டளை என்று நீர் கூறுவீராக. இன்னும் ஞானத்தில் இருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகவும் சொற்பமானது (என்றும் கூறுவீராக)                                                                                                                                                                                         (17 : 85)

உயிர் என்றால் என்னவென்ற கேள்விக்கு உலகம் தோன்றிய காலம் முதல் இன்று ஒரே ஒரு பதில் தான்.

கை கால் என்ற உறுப்புக்களைப் புரிந்து கொள்ளும் நாம் உயிர் என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அதற்குறிய அறிவு நம்மிடம் இல்லை. உயிர் உடல் முழுவதும் இருக்குமா? அல்லது உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்குமா? உயிர் நமக்கு எப்பொழுது ஊதப்பட்டது? நாம் தாயின் வயிற்றில் எந்த நிலையில் இருக்கும் போது ஊதப்பட்டது?

இதைப்பற்றிய எந்த அறிவும் நமக்கு கிடையாது. மேலும் உயிர் என்பதின் விஷயத்தில் மனித சமுதாயம் மிகப்பெரிய தொருஇயலாமையில் இருக்கின்றது.

செயற்கை கை கால் போன்று செயற்கை உயிர் கிடையாது, கிட்னியை மாற்றுவது போல் உயிரை மாற்ற முடியாது. இதுபற்றி அல்லாஹ் நமக்கு அறிவித்த்தை மட்டும் தான் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். மற்ற உறுப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்துவது போல் உயிரை எந்த ஆய்வுக்கும் உட்படுத்த முடியாது.

ஆக உயிர் (ரூஹை) என்று ஒன்று உடல் முழுவதும் பின்னிப்பிணைந்து கிடைக்கிறது. அது (ரூஹ்) உயிர் அல்லாஹ்வின் கட்டளை ஆகும். அல்லாஹ் வா என்றால் வந்துவிடும். போ என்று கூறினால் எந்த உடலில் போய் அமர வேண்டுமோ அங்கு சென்று அமர்ந்து விடும்.

இன்னும் அடுத்து உயிரின் மேன்மையை விளங்காதவர்களாக நாம் வாழ்கின்றோம். எத்தனையோ செல்வம் படைத்த மனிதர்கள் தனது செல்வத்தைக் கொண்டு பிரிந்த உயிரைத்திரும்பப் பெற முடியவில்லை. மருத்துவ உலகமோ இதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க முடியாமல் இயலாமையில் இருக்கிறது.

உதாரணமாக ஒரு மிகப்பெரிய அறிவாளி. தான் வாழ்ந்த நாட்கள் பல உயரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார். இவர் உயிரை காப்பாற்றினால் இன்னும் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்திருப்பார். இவரையாவது மரணத்தை விட்டு காப்பாற்றுவோம் என்று. உலகில் உள்ள அனைவரும் நினைத்தாலும் அவரை வாழவைக்க முடியாது.

உயிரை யாரும் யாருக்கும் கொடுக்க முடியாது. உயிர் ஒரு முறை தான் வரும். பின்ப போனால் திரும்ப வராது. இதுவே அல்லாஹ்வின் நியதி.
இந்த உயிர் உடம்பில் இருக்கும் போது தன்னை மருத்துவர் விஞ்ஞானி எனக் கூறுகின்றனர். உயிர் பிந்துவிட்டால்... ஜனாஸாவை எப்போது தூக்குவார்கள் எனக் கேட்பார்கள்.

உயிர் ஒரு அருளே

இப்போது கூறுங்கள். இந்த உயிர் அல்லாஹ்வின் மிகப் பெரியதொரு அருட்கொடைதானே.

இன்னும் சிந்தனைக்கு சில திருக்குர்ஆன் வசனங்களை பாருங்கள்.
அல்லாஹ் பனீ இஸ்ராயீல் கூட்டத்தினருக்கு கொடுத்த எத்தனையோ அருட்கொடைகளை திருக்குர்ஆனில் கூறுகின்றான். அதில் ஒன்றும் மிக முக்கியமானது. அவர்கள் மரணித்த பின்பு திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பியது.

அல்லாஹ் கூறுகின்றான்....

(நபியே) மரண யத்தால் தம் வீடுகள் விட்டும் ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்க வில்லையா? அல்லாஹ் அவர்களிடம் இறந்துவிடுங்கள் என்று கூறினான். மீண்டும் அவர்களை உயிர்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. ( 2 243)

அடுத்து இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களுக்கு கொடுத்த அருட்கொடைகளில் மிகப்பெரிய அற்புதமாகவும் அருட்கொடையாகவும் ரூஹைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

நீர் என் கட்டளையின்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப்போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில் அது என் கட்டளையைக் கொண்டு பறவையாகியதை (நினைவு கூறுவீராக). ( 5 110 )


எனவே ரூஹை (உயிர்) என்பது சாதாரணமானது கிடையாது. இறைவனின் மிகப்பெரிய நிஃமத் (அருட்கொடையாகும்) மிகவும் கண்ணியமானதுமாகும். நமக்கு கொடுக்கப்பட்ட உயிருக்காக அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் ஈடாகாது. 

(தொடரும் பயணங்கள் பாகம் ஒன்றை பார்க்க இங்கே செடுக்கவும் http://labbaikudikadunews.blogspot.ae/2013/10/blog-post_5.html )

இன்ஷா அல்லாஹ் தொடரும்

ஆசிரியர் 
முஹம்மது நாசிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக