Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 5 அக்டோபர், 2013

தொடரும் பயணங்கள்...

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய பெயரால்...

பயணம் தொடங்குகிறது- 01

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்!

இந்த வார்த்தை அடிக்கடி நம் காதுகளில் விழுகின்றது. சோகமான காலக்கட்டங்களில் கூறப்படும் இவ்வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை நாம் ஆர்வமாக தெரிந்து வைத்துள்ளோம்.


அல்லாஹ் கூறுகின்றான்,

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் , நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் (அல் குர்ஆன் 2 156)

எத்தனையோ ஜனாஸாக்கள் நமக்கு முன்பு செல்கின்றன. யார் யாரின் மரணச் செய்திகளெல்லாமோ நமது காதுகளை வந்தடைகின்றன. உடனே நாம் மொழிகின்ற வார்த்தை
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்!

அந்த ஜனாஸாக்கள் எங்கு செல்கின்றன ? அதன் பயணத்தின் தூரம் எவ்வளவு ? அந்த பயணத்திற்குரிய கட்டுச்சாதம் என்ன ? அந்த பயணத்தின் கஷ்ட நஷ்டங்கள் என்ன ? என்பதை நாம் அறிய முற்படுவதில்லை. அந்த ஜனாஸாவின் பயணத்தை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே நமது பயணமும் துவங்கும் என்பதை நாம் மறந்து வாழ்கிறோம்.

இந்த தொடரும் பயணம் எப்படி அமையும் ? இந்த முடிவுரா பயணத்தில் நமது நிலை என்ன ? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா ?
இப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஒவ்வொரு இலட்சியவாதிகளும் இந்த பயணத்தின் ஒவ்வொரு பாதைகளையும் நன்றாக விளங்கி அதை கடப்பதற்குரிய சரியான கட்டுசாத(ன)ங்கயோடு தங்கள் ஆயத்தப்படுத்திக் கொண்டவர்களே !

அந்தப் பாதைகளையும், அவர்கள் அந்தப் பயணத்தில் பயன்படுத்திய உபகரணங்களையும் நாமும் அறிந்து கொள்ளவே இந்தத் தொடரும் பயணங்கள்.

இனி படிக்கும் ஒவ்வொரு வரியையும் பயணிக்கும் பயணி நான் தான் என்ற உணர்வோடு படிக்க வேண்டும்.

உலகில் நாம் எத்தனையோ பயணங்களை மேற்கொள்கிறோம். இந்த பயணங்களுக்கு ஒரு எல்லை உண்டு. எல்லையில்லா ஒரு பயணத்தைத் தொடரும் போது அதாவது உலகை விட்டு ஒரு மனிதனின் உயிர் பிரியும் போது மனிதர்கள் இப்படிக் கூறுகின்றார்கள். இவன் வாழ்க்கை முடிந்துவிட்டது. இவன் ஓட்டம் நின்றுவிட்டது.

ஆனால் இவன் உயிர் உடலில் இருந்து என்று பிரியுமோ அன்று தான் இவனது உண்மையான பயணம் ஆரம்பமாகிறது என்பதை யாரும் அறிவது கிடையாது.

ஒரு மனிதனின் முடிவுரா பயணத்தின் தலைவாயில் மரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மரணம் என்றால் என்ன ? மரணம் ஏற்படும் போது நமது நிலை என்ன ? மரணத்திற்குப்பிறகு நமது நிலை என்ன ? என்பதையெல்லாம் அல்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் விவரிக்கின்றான்.


கையை இழந்தவனை உலகம் நொண்டி எனக் கூறுகின்றது. காதை இழந்தவனை செவிடன் என்றும் கண்ணை இழந்தவனை குருடன் என்றும் கூறுகின்றது. ஆனால் உடலில் உயிரை இழந்தவனை உலகம் என்ன வென்று கூறும் ? மய்யத் என்று கூறும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

ஆசிரியர்
முஹம்மது நாசிம்

1 கருத்து:

  1. அருமையான கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இந்த தளத்தின் இது போன்ற விழிப்புனர்வுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக.

    பதிலளிநீக்கு